வலைப்பதிவு காப்பகம்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

வெகுளாமை
கோபம் இருந்தால் முகம் விகாரமாகத் தெரியும் அத்துடன் மனநிம்மதியை இழக்க செய்யும். பல தீமைகளை செய்யவதற்கு தூண்டும். தணியாத கோபம் பாவத்தின் சின்னம். தியானம் செய்ய வேண்டும். முதுபெரும் ஞானிகளை வணங்கி இந்த குணக்கேட்டை நீக்கும்படி கேட்டு கொள்ளவேண்டும்.
"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்"
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்
"சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று"
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.
"நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற"
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக