வலைப்பதிவு காப்பகம்

புதன், 9 நவம்பர், 2016

ஜாமக்கோள் உதயம்
ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல் பொழுதையும்,12 மணி நேரம் இரவுப்பொழுதையும் கொண்டதாகும்.12 மணி நேரம் கொண்ட பகல் பொழுது 8 ஜாமங்களாகவும்,12 மணி நேரம் கொண்ட இரவுப்பொழுது 8 ஜாமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
8 ஜாமம் = 12 மணி
1 ஜாமம் = 12/8 = 1 1/2 மணி
எனவே ஒரு ஜாமம் என்பது 1 1/2 மணி நேரமாகும்.பகல் பொழுதில் வரும் ஜாமங்கள் சூரிய உதயத்தில் தொடங்கி சூரிய அஸ்தமனத்தில் முடிவடையும்.இரவுப்பொழுதில் வரும் ஜாமங்கள் சூரிய அஸ்தமனத்தில் தொடங்கி சூரிய உதயத்தில் முடிவடையும்.
1ம் ஜாமம் 6 மணி முதல் 7 1/2 மணி வரை
2ம் ஜாமம் 7 1/2 மணி முதல் 9 மணி வரை
3ம் ஜாமம் 9 மணி முதல் 10 1/2மணி வரை
4ம் ஜாமம் 10 1/2 மணி முதல் 12 மணி வரை
5ம் ஜாமம் 12 மணி முதல் 1 1/2 மணி வரை
6ம் ஜாமம் 1 1/2 மணி முதல் 3 மணி வரை
7ம் ஜாமம் 3 மணி முதல் 4 1/2 மணி வரை
8ம் ஜாமம் 4 1/2 மணி முதல் 6 மணி வரை
ஜாமக்கிரகங்கள் உதமாகும் வரிசை முறை கீழ்கண்டவாறு அமையும்.
சூ-செ-குரு-பு-சு-சனி-சந்-ராகு
அந்தந்த கிழமையின் அதிபதி கிரகம் முதலிலும் அதையடுத்து மற்ற கிரகங்களும் வரிசையாக உதயமாகும்.
ஒரு குறிப்பிட்ட கிழமையில் பகல் நேரத்தில் எந்த கிரக வரிசைப்படி ஜாமக்கோள்கள் உதயமாகின்றனவோ அதே வரிசைகிரமத்திலேயே இரவிலும் கிரகங்கள் உதயமாகும்.
ஜாமக்கோள்கள் ராசி கட்டத்தில் அடைக்கப்படும்போது மீனம் முதல் மேசம் வரை வலமிருந்து இடமாக(அதாவது இடஞ்சுழியாக) குறிக்கப்படும்.ராசிகள் 12,ஆனால் ஜாமக்கோள்கள் 8 மட்டுமே எனவே ராசி கட்டத்தில் உள்ள ஸ்திர ராசிகளான ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய 4 ராசிகளைத்தவிர்த்து மீதமுள்ள 8 ராசிகளில் மட்டும் ஜாமக்கோள்கள் குறிக்கப்படும்.
உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை 8 ஜாமங்களில் ஜாமக்கோள்கள் உதயமாகும் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக