வலைப்பதிவு காப்பகம்

புதன், 9 நவம்பர், 2016

நட்சத்திர நிமித்தங்கள் #
ஒவ்வொரு வீட்டிலும் 27 நட்சத்திரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திரங்களின் ஆளுமை கொண்ட பொருட்கள் நிச்சயம் அதிக எண்ணிக்கையில் இருக்கும். அதைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த வீட்டில் ஆளுமை செய்யும் நட்சத்திர தேவைதையின் ஆளுமையும் அங்கு இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.
அதேப்போல் நட்சத்திரங்களின் ஆளுமை கொண்ட பொருட்கள் விருத்தியடைதல்/ பழுதடைதல் அல்லது பாதிக்கப்படுதல் இதை வைத்தே
அந்த நட்சத்திரத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை நிலை நன்மை தீமைகளை கணிக்கலாம்.

உதாரணமாக ஒரு வீட்டில் மின் விசிறிகள் அதிகம் இருந்தால் அந்த வீட்டில் விசாகத்தின் ஆளுமை அதிகம் உள்ளது என்றும் அதன் அதிதேவதையான முருகப் பெருமானின் நல்லாசியும் ஆட்சியும் அங்கு உள்ளது என்றும் கூறலாம்.
ஒரு வீட்டில் கண்ணாடி பொருட்கள் அடிக்கடி உடைந்தாலோ அல்லது கடிகாரம் அடிக்கடி பழுது பட்டாலோ அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு குரு பகாவனின் அருள் இல்லை என்றும் குருவழிபாடு செய்ய வேண்டும் என்றும்.பூசத்தில் பிறந்த மனிதர்கள் அங்கு இருந்தாலோ அல்லது அவ்வீட்டில் யாருக்காவது பூச நட்சத்திர தசா புத்தி அந்தரம் நடப்பில் இருந்தாலோ அவர்களுக்கு தோஷம் என்றும் அறிந்து பலன் கூறலாம். பரிகாரமும் தேடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக