வலைப்பதிவு காப்பகம்

சனி, 11 பிப்ரவரி, 2017

(பலராமையா முறை )
கண் படலத்துக்கு (cataract ):
இந்த கண் படலம் ஆரம்பித்ததும் கண்களின் ஒளி மங்கும்.சாதாரணமாய் இவ்வியாதி 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருவதுண்டு,ஆனால் இக்காலத்தில் சிறுவர்களுக்கும் கூட இந்நோய் தாக்கப்படுகிறது.காரணம்,அவர்கள் தாய் தந்தையர்கள் உட்கொண்ட ஆன்டிபையோடிக்ஸ் (antibiotics ) என்னும் விஷ ஊசிகள் போட்டுக் கொண்டதின் பலன்தான்.குழந்தைகளுக்கும் கூட இந்த மருந்துகள் கொடுக்கப்பட்டு பல குழந்தைகள் பக்க விளைவுகளுக்கு உள்ளாகின்றனர்.
இதற்கு மருந்து :
நேத்திர மூலித் தைலம் மிகவும் உயர்ந்தது.நேத்திர மூலி என்பது தரையில் படரும் ஒரு திவ்ய மூலிகை.இதற்கு நாலிலைக் குருத்து என்றும் சொல்வர்.இதன் பூ நல்ல பாம்பு படம் வளைந்து இருப்பது போலிருக்கும்.பூவின் நிறம் வெண்மை.இலைகள் சுரசுரப்பாயிருக்கும்.இலையை இரண்டாக ஒடித்தால் ஓடியும்.மென்றால் குழகுழப்பாயிருக்கும்.ஒவ்வொரு கணுவுக்கும் நாலு இலைகள் இருக்கும்.நம் தோட்டங்களில் பயிர் செய்யக்கூடியது.
இம் மூலிகையை இலைகளை பறித்து தண்ணீரில் அலம்பி துணியால் ஈரத்தை துடைத்து விட்டு சன்னமாக கத்தரித்து ஒரு செப்பு (செம்பு )பாத்திரத்தில் போட்டு மூலிகை முங்கும் அளவுக்கு சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி வெயிலில் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வைக்கவும்.இதற்கு சூரிய புடம் என்று பெயர்.
வெயில் காலங்களில் மூலிகை பறித்து சூரிய புடமிட்டால் எண்ணெய் சாக்லேட் கலரில் இருக்கும்.மற்ற நாட்களில் பச்சை நிறத்தில் இருக்கும்.
வடிகட்டி இலைகளை நீக்கி எண்ணையை மட்டும் எடுத்து கொள்ளவும்.
உபயோகம் :
இந்த எண்ணெயைக் கண்கள் ஒவ்வொன்றிலும்,2,3,சொட்டுக்கள் காலை ,மாலை இருவேளைகள் விட்டுக்கொண்டு வர ஆரம்ப கண் படலம் குணமாகும் .கண்களில் உண்டான 96 நோய்களும் குணமாகும்.கண் படலம் வந்த பிறகுதான் போட வேண்டுமென்பதில்லை.எல்லா வயதினருக்கும் உபயோகிக்கலாம்.கண் படலம் வராமல் தடுக்கும்.
அதுவுமின்றி மூக்கில் பீனிசம் உடையவர்களுக்கும் கண்ணிலும் மூக்கிலும்,பிரதி தினமும் இந்த தைலத்தைப் போட்டுவர மிக்க குணத்தைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக