வலைப்பதிவு காப்பகம்

சனி, 11 பிப்ரவரி, 2017

காயத்ரி மந்திரம் என்பது அநேகமாய் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்....ஆனால் இந்த தொடர் அது பற்றியதல்ல, தலைப்பை இன்னொரு முறை தீர்க்கமாய் படித்துக் கொள்ளுங்கள்.


குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது அட்சரத்தை ஒரே சீரான கதியில் திரும்பத் திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும் , உயிரையும் கவசம் போல காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை தத்துவம்.


இத்தகைய மந்திரங்களில் தலையாயதாக கருதப் படுவது காயத்ரி மந்திரம். இதை தொடர்ந்து முறையாக ஜெபித்து வருபவர்களுக்கு நலத்தையும், வளத்தையும் அருளக் கூடியது. மேலும் இவர்களுக்கு எந்த தீங்கும் நேராது என்கிற நம்பிக்கையும் உள்ளது.


காயத்திரி மந்திரத்தை ஜெபிப்பவரின் மனம், வாக்கு , காயம் ஆகியவற்றால் செய்த பாவங்களை அகற்றி பிரம்மத்தை உணரவைக்கும் என்றும் கூறப் படுகிறது.ஞானத்தின் உயரிய நிலையான பிரம்மத்தையே உணரவைக்கும் வல்லமை கொண்டு விளங்குவதால் இந்த காயத்ரி உபதேசத்தை "பிரம்மோபதேசம்" என்றும் கூறுகின்றனர்.


"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்"

என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவது இதன் மகத்துவத்தை உணர்த்தும்.


இத்தனை பெருமை வாய்ந்த காயத்திரி மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் விசுவாமித்ர முனிவர். இவர் காயத்தையே(உடலை) திரியாக எரித்து மாகா மந்திர சக்தியான காயத்திரி மந்திரத்தினால் வேத மாதாவான காயத்திரி அம்மனை தரிசித்து எண்ணற்ற சித்திகளைப் அடைந்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றவர்.


விசுவாமித்ர முனிவரால் அருளப்பட்ட காயத்ரி மந்திரம் இதுதான்...சமஸ்கிருத மொழியில் அமைந்திருக்கிறது இந்த மந்திரம்....


"ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹிதி
யோ: யோந: ப்ரசோதயாத்"


இத்தனை சிறப்பான காயத்ரி மந்திரம் பற்றி திருமூலர் தமிழில் இப்படி சொல்கிறார்...


காயத்திரியே கருது சாவித்திரிஆய்தற்க்குவப்பவர் மந்திரமாங்குன்னிநேயத்தேர்ரேறி நினைவுற்று நேயத்தாய்மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே!


- திருமூலர் -


இந்த இடத்தில்தான் நெருடல் வருகிறது. பொதுவாக சித்தர்கள் மந்திரங்கள் அனைத்துமே தமிழிலேயே இருக்கின்றது அப்படி இருக்க திருமூலர் சொல்லும் காயத்திரி மந்திரம் வேதங்களில் சொல்லப்பட்ட சமஸ்கிருத காயத்ரி மந்திரமா? அல்லது சித்தர்கள் தங்களுக்கென தனியான காயத்ரி மந்திரம் சொல்லி இருக்கிறார்களா? அப்படி சொல்லி இருந்தால் அது என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக