தந்திரச் சடங்குகள் பெண்குறியை மையமாகக் கொண்டவை. பெண்குறி பாகா, லதா
எனப்படுகிறது. அதனால், தந்திரச் சடங்குகள் பாகயாகம், லதா சாதனா எனப்படுகிறது.
என்பதனால் தந்திரச் சடங்குகள் பெண் குறிச் சடங்குகள் என்றறியலாம்.
பெண்ணுக்குள் சீவசக்தி உள்ளது. அதன் வெளிப்பாடே இரத்தப்போக்கு என்றார்கள்.
அதனால், பெண் ஒரு விதத்தில் தீட்டானவள், ஒரு விதத்தில் புனிதமானவள் என்பதாலும்
ஆண்கள் நெருங்கக் கூடாதவள் ஆனாள்.
மது, மாமிசம், மச்சம்(மீன்) முதிரை (தானியம்) மைதுனம் (கலவி)
இந்த ஐந்தைக் கொண்டுதான் கடவுளைக் காண முயல்கின்றனர். நாமோ கடவுளைக் காண
முற்படாவிட்டாலும் இந்த ஐந்தும் எதற்கு என்று அறிந்து கொள்ள வேண்டும்.
மீன், மாமிசம், தானியம் இவற்றை ஏற்றுக் கொள்ளலாம். மதுவையும் மாமிசத்தையும்
என்ன செய்ய? என்கிறீர்களா. தந்திரத்தில் இந்த இரண்டுந்தாம் முக்கியமானவை.
மது இல்லாமல் கடவுளைக் காண செய்யப்படுகின்ற பயிற்சிகளைச் செய்ய முடியாது. 'மது
இல்லாவிட்டால் சித்தி இல்லை'. எனவே கவனமாகக் குடி! அவளையும் குடிக்கச் செய்.
பிறகே மந்திரம் ஓதலாம்! என்கிறது, தந்திரம்.
இவ்வாறு செய்யப்படும் சாதனைக்கு வாமாச்சாரம் என்று பெயர். இதனை பஞ்ச மகர வித்தை
என்பார்கள். இதனை புனிதமான வித்தை என்கிறார்கள்.
இந்த வித்தையை வங்காளம், அஸ்ஸாம்,கேரளாம் ஆகிய பகுதிகளில் மிகவும் இரகசியமாகச்
செய்துவருகின்றார்கள். இது மிகவும் வசதியுள்ளவர்கள் மட்டுமே பயிலக் கூடிய
பயிற்சியாக இருந்து வருகிறது. இது, சிற்றின்பத்திற்காகச் செய்யப்படுவதில்லை.
பேரின்ப நிலையை அடைவதற்காகச் செய்யப்படுகின்ற பயிற்சி என்கிறார்கள்.
இந்த தாந்திரிக பயிற்சியைச் சிறப்பிக்க, அஸ்ஸாமில் காமாக்கியா என்று ஒரு கோயில்
இருக்கிறது. அதன் மூலஸ்தானத்தில் பெண் குறியையே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
தாந்திரிக யோகத்திற்கு அந்த கோயிலே முதன்மையாகக் கருதப்படுகிறது.
இந்த யோகத்தில் ஈடுபடும் பெண்கள் பைரவி என்றும் ஆண்களை பைரவர் என்றும்
அழைக்கிறார்கள்.
இந்த யோகத்தை விரிவாக "திருமந்திரம்" "கந்த புராணம்" விவரிக்கிறது.
பாலுணர்வின் விளைவாகத்தான் பிரபஞ்ச உற்பத்தி என்று இறைவழி ஒப்புக் கொள்கிறது
Becomes one with God என்பதன் உண்மையான விளக்கம் யாருக்கும் தெரியவில்லை.
மனிதன் எப்படிக் கடவுளோடு இணைய முடியும்? என்று எதிர்ப்பிரச்சாரம் செய்ததன்
விளைவாகத்தான் தாந்திரிக முறை தியான முறை பற்றி யாரும் விரிவாகவும் விவரமாகவும்
புரிந்து கொள்ளவில்லை.
ஆண் பெண் சேர்க்கையின் போது இரண்டு உடலும் மனமும் ஒன்றாகி இணைந்து உச்சநிலை
இன்பத்தில் இருக்கும் போதுதான் இறைவனுடன் இறைவனது அன்பில் ஆனந்த சாகரத்தில்
மூழ்கலாம்! என்கிறது, தந்திர தியான அனுபவம்.
ஆண் பெண் இறைவன் ஆகிய இம்மூன்றும் இணைந்த நிலையை 'சமாதி' யோகம் என்கிறார்கள்.
சமாதி என்பது முதிர்ந்த இன்பநிலையைக் குறிக்கும்.
இந்த தாந்திரிக தியானத்தினால் நல்ல எண்ணங்கள் உதயமாகும். கிரியாமனம் இயங்க
ஆரம்பிக்கும். அதன்பின் எண்ணியது எல்லாம் நடக்கும்.
மலை ஏறிப்போகும் போது மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. அப்போது வெளிமன
உணர்வுகள் அடங்கி, கிரியா மனம் திறந்து கொள்கிறது. அவ்வேளையில் என்ன
எண்ணினாலும் அது நடக்கும் என்பதால், மலைக்குச் சென்று வரும் பழக்கத்தை
ஏற்படுத்த மலைக்கோயில்கள் உருவாக்கப்பட்டன. மலைக்கோயிலுக்குச் சென்றான்! நான்
நினைத்தது நடந்தது! இறைவன் எனக்கு வரமளித்துவிட்டான்! என்று, மலையேறுவதனால்
உண்டாகும் நன்மையை அறியாமல் பேசுவோர் உண்டு.
வெளிமனம் அடங்கும் போது உள்மனம் திறக்கும். இதுதான் உலகறிந்த உண்மை. அதை
அடையும் வழிதான் தாந்திரிக தந்திர முறைகள்.
இம்முறையின் நன்மையைக் கருத்தில் கொண்டே திருமணமுறைகள் ஏற்படுத்தப் பட்டன. மண
உறவுமுறைகள் எல்லாம் தாந்திரிக தந்திர முறையினால் அடையக்கூடிய இன்பத்தையும்
பயனையும் அடையச் செய்வதற்காகவேயாகும்.
இறைவழி நாட்டத்திற்கு இரண்டுமுறைகள் இருந்தன. ஒன்று தாந்திரிக தந்திர உறவுமுறை.
மற்றொன்று, ஆன்மிக நாட்ட முறை. ஆன்மிக நாட்டமுறையை விட தாந்திரிக தந்திர முறையை
மேற்கொண்டவர்களே சமாதி நிலையை அடைவார்கள்.
இம்முறையை அடிப்படையைக் கொண்டே உலகில் மதங்கள் அனைத்தும் தோன்றின.
ஓங்காரம் என்பது ஒரு மாபெரும் சிவ சக்தியின் சின்னமாக விளங்கி வருகிறது. பல
பெயர்களில் பல மதங்களில் குறிப்பாக இந்து, ஜைனம், புத்தம் ஆகிய மதங்களில்
ஓங்காரச் சின்னம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.
ௐ
ஓங்காரமானது ஜீவன்களின் துன்பமான பிறப்பையும் சிறப்பையும் விடுதலை செய்து
ஜீவன்களை விடுவிக்கும் சக்தியுடையது என்று தந்திர நூல்கள் கூறுகின்றன.
ஓம் தேவநாகரி சின்னம்
இந்த ஓங்காரச் சின்னம் ஆண்-பெண் உறுப்புகளின் இணைப்பைக் குறிக்கிறது.
ஸ்வஸ்திகா சின்னம்
கிராஸ் மற்றும் ஸ்வஸ்திக் சின்ன்ங்கள் மிகவும் தொன்மைக் காலந்தொட்டே இருந்து
வருகிறது. இதம் இரகசியங்களை உணர்ந்து படைப்பவனைத் தொழுதிருக்கிறார்கள்.
தாந்திரீகள் ஸ்வஸ்திகா சின்னத்தை மங்களகரமான சின்னமாக எடுத்துக் கொண்டார்கள்.
இச்சின்னம் அமெரிக்க போன்ற மேலை நாடுகளிலும் பரவியது. அதை அவர்கள் Sex energy
force என்று சொல்கிறார்கள்.
கொலம்பஸ் காலத்துக்கு முன்பே கிராஸ் மற்றும் ஸ்வஸ்திகா சின்ன்ங்கள் ஆண்-பெண்
பாலுணர்வு சின்னங்களாகக் கருதி வந்துள்ளனர்.
ஸ்வஸ்திகா சின்னத்தின் புனிதம் கருதிய சீன அரசு, அச்சின்னத்தை படமாகவோ,
துணியிலோ அச்சிட்டோ பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதித்து அதன் புனிதம்
பாதுகாக்கப்பட்ட்தாகச் சீன வரலாறு குறிப்பிடுகிறது. தந்திரம்
தந்திரம் என்பது தாய் முதன்மையாகக் கொண்ட சமுதாய முறை. வேதியம் என்பது ஆண்
முதன்மையாகக் கொண்ட சமுதாய முறை.
தந்திரம் மதம் சார்ந்ததல்ல. சமுதாயம் என்னும் மக்கள் ஒழுக்கம். தன் + திரம் =
தந்திரம். தன் = விருத்தி செய்தல். திரம் = இனம். தன்னின விருத்தியே
தந்திரமாகும். இது உலகத் தோற்றத்தைக் குறிப்பது.
பண்டைய தாயாட்சி சமுதாயத்தைப் பற்றியும் அதன் சிறப்புப் பண்பான சடங்குகள்
பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், சடங்குகளின் நுட்பத்தை அறிந்துகொள்ள
வேண்டும். அவ்வாறில்லாமல், பொதுவாகப் பார்த்தால், "கடவுளே உலகைப் படைத்தார்"
என்ற விளக்கத்தையே கருத நேர்ந்துவிடும்.
சிந்துவெளியில் கண்டெடுக்கப் பெற்ற முத்திரைகளில் தந்திரத்தின் கூறுகள் காணக்
கிடைக்கின்றன. சிந்து வெளி நாகரிகம் விவசாய நகர நாகரிகம் அங்கு விவசாய மந்திர
சடங்குகளான தாந்திரிகம் இருந்த்தில் வியப்பில்லை. இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு
முற்பட்டது தாந்திரிக தந்திரம்.
இந்த தந்திரங்கள் இந்தியப் பண்பாட்டில் ஆழப் பதிந்துள்ளது. இந்து மதம் என்று
சொல்லப்படுகின்ற தொகுப்பின் பல்வேறான சடங்குப் பகுதிகள் தந்திரத்தில் உள்ளவையே
ஆகும்.
இந்துக்கள் சக்தி என்று சொல்வது தந்திரத்தைக் குறிப்பதாகும்.
புத்த தத்துவங்களில் தந்திரங்களின் பாலியல் உவமைகள் தாந்திரிக தத்துவத்தின்
கூறுகள் அதிகமாக உள்ளன. இவை புத்த வார்த்தைகளால் கூறப்படுகின்றன.
தாந்திரிகத்தில் ...............................................ஆண் - பெண்
இந்து தந்திரத்தில், சிவன் - சக்தி
புத்தத்தில் ......................................................வஜ்ர – பத்ம
பிரக்ஞா – உபய
வைணவ சகஜியர் ....................................கண்ணன் – ராதை
இரசவாதம் ...............................................ரசம் – மைகா
என்று மாற்றிக் கொண்டுள்ளன.
இன்றைய தந்திரத்தில் மேலோடும் பக்தி, பூசை, மோட்சம் என்பதெல்லாம் ஆதி
தந்திரத்தின் ஆண் பெண் கூடலும் அதனை வலியுறுத்தும் சடங்குகளும் மறைந்து
கிடக்கின்றன.
இக வாழ்வில் விடுதலை பெற விரும்புகின்றவர் முதலில் த உடலைப் பேண கற்கவேண்டும்.
'மைகா உன் விதை. ரசம் என் விதை
இவற்றின் கூடலில் ஓ – தேவியே
மரணமும் வறுமையும் அழியும்.'
என்று உடல் விடுதலையைக் கூறுகிறது. கூடல் என்பது தாந்திரிகத் தந்திரத்தின்
பொருள் முதல் வாதம் ஆகும்.
தந்திரத்தில் யோகப் பயிற்சிகள் கூறப்பட்டுள்ளன. தந்திரம் விவசாயத்துடன்
இணைந்தது. இது, நாகரிகத்தின் வேராகும்.
நன்றி திரு Jeya Prakas

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக