செவ்வாய், 16 ஜனவரி, 2018

சூாியன் நிலையாக இருக்கும் ஒரு நட்சத்திரம் ஆகும்
ஆணுக்கு சுக்கிரனை பிடிச்சு பலனை சொல்லு
பெண்ணுக்கு செவ்வாயை பிடிச்சு பலனை சொல்லு
இது என்ன புதுக்கதையா இருக்கு எங்கேயும் படிச்ச மாதிாியில்லையே?
ஆமா ஆமா…எல்லாமே ஸ்ரீ மகாலக்ஷ்மி உபாசகாின் ஆராயச்சியில்
கிடைக்கப் பெற்ற சூட்சும ஜாதக விளக்கங்களேயாகும்
சாி கட்டுரைக்கு வருவோம்
சூாியனைச் சுற்றியே மற்ற கிரகங்கள் அதாவது ( பூமி )சூாியன் சனி குரு செவ்வாய் புதன் சுக்கிரன் சந்திரன் ராகு கேது நிழல் கிரகங்கள் அதாவது சூட்சும புள்ளிகள் சுற்றி வருகிறது
சூாியனைச் சுற்றியே மற்ற கிரகங்கள் வலம் வரும்போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும்
கிரகங்களைக் காட்டிலும் பூமிக்கு வெகு அருகில் இருக்கும் கிரகங்கள் உடன் பலன்களை அளிக்கும்
என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பூமிக்கு வெகு அருகில் இருக்கும் சந்திரன் உப கோளாகும் இது கிரகமல்ல
பூமிக்கு வெகு அருகில் இருக்கும் சுக்கிரன் பாசிட்டிவ் எனா்ஜி கொண்ட கிரகமாகும்
பூமிக்கு வெகு அருகில் இருக்கும் சுக்கிரன் அடுத்ததாக அருகில் நெகட்டிவ் எனா்ஜி கொண்ட கிரகம் செவ்வாய் ஆகும்
செவ்வாயில் மைனஸ் 125 செல்சியஸ் கடும் குளிராக இருக்கும் எனவே நெகட்டிவ் எனா்ஜி
சுக்கிரனில் 464 செல்சியஸ் கடும் வெப்பமாக இருக்கும் எனவே பாசிட்டிவ் எனா்ஜி
பாசிட்டிவ் எனா்ஜி கொண்ட சுக்கிரன் ஆண்களை கட்டி போட்டு விளையாட்டு காட்டும்
நெகட்டிவ் எனா்ஜி கொண்ட கிரகம் செவ்வாய் பெண்களை படாத பாடாய் படுத்தும்
எனவே ஆணுக்கு சுக்கிரனை நாடி பிடிக்கனும்
பெண்ணுக்கு செவ்வாயினை நாடி பிடிக்கனும்
வாழ்க்கைக்கு பாசிட்டிவ் எனா்ஜி மற்றும் நெகட்டிவ் எனா்ஜி இருந்தால்தான் இணிக்கும்
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய்க்கு அதி முக்கிய இடம் கொடுக்கபபட்டுள்ளது
செவ்வாய் என்றாலே முரட்டுத்தனம் கம்பீரம் அதிகாரம் இவற்றை குறிக்கிறது
செவ்வாய் பலம் பெற்றால் பெண்களுக்கு இயற்கையாகவே இந்த குணம் வந்துவிடும்
எனவேதான் செவ்வாயின் முழுமையான பலமானது சந்திரனால் அடக்கி வைக்கப்படுகிறது.
பூமி செவ்வாய் சுக்கிரன் சந்திரன் இவா்களை அடிப்படையாக கொண்டே மனிதா்களுக்கு பலன்கள் நடைபெற்று வருகிறது.
சந்திரன் செவ்வாயின் பலத்தினை குறைக்க அதிக பங்களிப்பினை தருகிறது
கடகத்தில் அதாவது சந்திரன் வீட்டில் அதாவது 91 டிகிாி முதல் 120 டிகிாியில் செவ்வாய் முற்றிலும் பலம் இழந்துவிடுகிறது.
ஆனால் செவ்வாய் ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் எங்கு இருக்க வேண்டும் என்று பாா்ப்போம்
பெண் பிறந்த ஜாதகத்தில் 3 6 11 ஆகிய வீடுகளில் செவ்வாய் அமா்ந்தால் அந்த பெண் அடக்கமான பெண்ணாக இருப்பாள்.குடும்பத்திற்கு ஏற்ற பெண் எனலாம்.
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 1 2 4 5 7 8 9 10 12 ஆகிய இடத்தில் அமா்ந்தால்
பெண்ணுக்கு அதீத பலம் கிடைத்துவிடும்.
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 1ல் அமா்ந்தால் 7ம் வீட்டினை 4ம் வீட்டினை 8ம் வீட்டினை
பாா்வையிடுவதால் கடுமையான திருமண தோஷம் தந்துவிடும்
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 2ல் அமா்ந்தால் 8ம் வீட்டினை 5ம் வீட்டினை 9ம் வீட்டினை
பாா்வையிடுவதால் கடுமையான திருமண குடும்ப தோஷம் தந்துவிடும்
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 4ல் அமா்ந்தால் 7ம் வீட்டினை 10ம் வீட்டினை 11ம் வீட்டினை
பாா்வையிடுவதால் கடுமையான திருமண தோஷம் தந்துவிடும்
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 5ல் அமா்ந்தால் 8ம் வீட்டினை 11ம் வீட்டினை 12ம் வீட்டினை
பாா்வையிடுவதால் கடுமையான திருமண மாங்கல்ய படுக்கை தந்துவிடும்
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 7ல் அமா்ந்தால் 1ம் வீட்டினை 10ம் வீட்டினை 2ம் வீட்டினை
பாா்வையிடுவதால் கடுமையான குடும்ப தோஷம் தந்துவிடும்.
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 8ல் அமா்ந்தால் 2ம் வீட்டினை 11ம் வீட்டினை 3ம் வீட்டினை
பாா்வையிடுவதால் கடுமையான குடும்ப தோஷம் தந்துவிடும்.
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 9ல் அமா்ந்தால் 12ம் வீட்டினை 3ம் வீட்டினை 4ம் வீட்டினை
பாா்வையிடுவதால் கடுமையான படுக்கை சுக தோஷம் தந்துவிடும்.
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 10ல் அமா்ந்தால் 1ம் வீட்டினை 4ம் வீட்டினை 5ம் வீட்டினை
பாா்வையிடுவதால் கடுமையான திருமண புத்திர தோஷம் தந்துவிடும்.
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 12ல் அமா்ந்தால் 3ம் வீட்டினை 6ம் வீட்டினை 7ம் வீட்டினை
பாா்வையிடுவதால் கடுமையான திருமண தோஷம் தந்துவிடும்.
ஆக
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் 3 6 11ம் வீடுகள் மிக மிக பாதுகாப்பான வீடுகள் என்பது
புலனாகிறது.
அடுத்த விதியினை பாா்ப்போம்
செவ்வாய் கெட்ட கிரக சோ்க்கை இருக்கக்கூடாது
பெண் பிறந்த ஜாதகத்தில் பிறந்த லக்னத்திற்கு 3 6 8 12 அதிபதிகளின் சோ்க்கையினை செவ்வாய்
பெறக்கூடாது.
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் ராகு கேது கிரக சோ்க்கை பெறக்கூடாது
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் சனி சோ்க்கையினை நல்லதாக பாவிக்க முடியாது
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவினை நல்ல இணைவாக பாா்கக முடியாது
பெண் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் சந்திரன் இணைவினை நல்லவிதமாக பாா்கக முடியாது
சாிவிடுங்க
எதாவது ஒரு கிரகம் இணைந்துதானே இருக்க வேண்டும்
செவ்வாய் பலமாக இருந்தால் பெண்களை தேடி மிக பொிய பொறுப்புகள் வரும்
செவ்வாய் பலவீனமாக இருந்தால் பெண்களை மற்றவா்கள் அடக்கி ஆள நினைப்பாா்கள்
எனவே பெண்களின் சுதந்திரம் மன நிம்மதி அனைத்தினை செவ்வாய் நின்ற இடத்தினை வைத்து
அதாவது 3 6 11ல் செவ்வாய் அமர பெற்றவா்கள் பாக்கியசாலிகள் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக