கார்ப்போட்டம்
----------------------
"தீயபூராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம் தூயமந் தாரம்
தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே
பாயுநாள் தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக காயும்வேற்
கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே"
----------------------
"தீயபூராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம் தூயமந் தாரம்
தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே
பாயுநாள் தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக காயும்வேற்
கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே"
தனுசு ராசியை சூரியன் கடந்து செல்லும் போது அதிலுள்ள பூராடம் நட்சத்திரத்தைக் கடப்பதற்கு 14 நாள்களை எடுத்துக் கொள்கிறது. இது மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த நாள்களில் காணப்படுகிற தட்பவெப்ப நிலையை அடிப்படையாக வைத்து அடுத்த ஓராண்டிற்கான மழை கணிக்கப்படுகிறது. இதற்குத்தான் கர்ப்போட்டம் என்று பெயர்.
இந்தப் பதிநான்கு நாட்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால், லேசான தூறல் இருந்தால், மேகங்கள் வானில் திரிந்தால், வானம் மேகமூட்டமாக இருந்தால் எதிர்வரும் மாதங்களில் நல்ல மழை இருக்கும். கருவோட்ட நாள்களில் நல்ல வெயில் அடித்தால், கனமழை பெய்தால், வானத்தில் வெள்ளை மேகங்கள் திரிந்தால், வானம் வெட்ட வெளியாய் இருந்தால் எதிர்வரும் நாள்களில் மழை பொய்த்துப் போகும் எனபது தான் கருவோட்டப் பலன். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக