சங்க இலக்கியத்தில் சித்தர்கள்.
சித்தர் என்னும் சொல்லுக்கு உரிய விளக்கம், சித்தர்கள் எனப்படுவோர் யாவர்?
.சித்தர்கள் என்றால் வீடுபேறு அடைந்தவர்கள் எனப்பொருள் கொள்வர் சிலர், ஒரு
செயல் நிறைவேறிவிட்டதா என வினவுவார் காய சித்தி ஆயிற்றா என வினவுவது
வழக்கம், சாயுச்சிய நிலை அடையப்பெற்றவரே சித்தர் என்பர். அட்டமா சித்தி
முதலிய யோகசித்தி பெற்றவர்களையும் சித்தர்கள் என்று அழைப்பர்.சிலர்
சித்துக்கும் சித்தத்ததுக்கும் தொடர்பு காட்டிச் சித்தத் தெளிவுடையாரே
சித்தர் என விளக்கம் அளிப்பர்.மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு. ஒரு
பொருளை இன்னொரு பொருளாக மாற்றுவதும், உறுமாறுவதும் சித்தர் சாதனையில்
முக்கியமானவையாகும்.சித்தர்கள் தங்கள் சாதனையை காய சாதனை (தேகத்தை
மேம்படுத்துவது) என்றனர்.அதன் முலம் காயசித்தி (தேகத்தை பூரணத்துவம் அடையச்
செய்வது) பெறுவது அவர்கள் நோக்கம்.
ஓம் என்ற பிரணவ ஒலி உலகத்தின் முல ஒலி ஆகும். அ. உ. ம். முன்றும் சேர்ந்து ஓம் என்பர்.
அ. சூரியன், உ. சந்திரன், ம். அக்கினி ஒளிமயமான அ நாதம், உ விந்து, ம் கலை, நாத விந்து கலைகளின் தொகுப்பே ஓம் என்றும் கூறுவர்.
அ. கிரியா சக்தி (பிராமி),
உ. இச்சா சக்தி (வைணவி),
ம்.ஞானசக்தி (ரௌத்ரி) என்பது சித்தர் கருத்து.சீக்கிரமே தருமம் செய் கொஞ்சம் திருப்பணிகளும் செய்.என்றார் சித்தர்.அறப்பணியும், இறைபணியும் இறந்தும் இறவாப் பெரு வாழ்வளிக்கும்.உன்னிடம் இல்லை என்று கேட்டு நிற்கும் எளியோரிடம் இருந்தும் இல்லை என்று சொல்லாதே. நாளை வா என்று தள்ளாதே. இருந்தால் அப்போதே கொடுத்துதவு.நலிவுற்றவரை நசித்து வாழ என்னாதே. வஞ்சனை செய்ய முயலாதே. உன்னைத்தஞ்சமென்று வந்தடைந்தவரையே கெடுப்பதற்கு துணியாதே. உன் கண்ணில் பட்டதையும், காதில் விழுந்ததையும் உண்மை என்று கொள்ளாதே.கற்புறைப் பெண்டிர் மீது காமசிந்தை வையாதே. கட்டியவளே என்றாலும் உற்றது சொல்லாதே. பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி இடம் கொடுத்து அவர்களுடைய அலட்சியத்துக்கு உள்ளாகாதே. கொலை, களவு, பொய் விலக்கு, தன்னை வியந்து கொள்கிறவனும் வலுச் சண்டைக்கு நிற்கிறவனும் காணாமல் போவான்.சிந்தித்தால் தெளிவு வரும். சித்தர்களது பாடல்களைப் படித்தால் சிந்தனையும், தெளிவும் சேர்ந்து வரும்.மனிதர்களுக்கு ஐம்புலன்களால் அறியப்படும் அறிவு ஐந்தும், ஆத்மா ஒன்றுமாக ஆறறிவு. மிருகங்களுக்கு நான்கு அறிவுகளும், சீவனுமாக ஐந்து.பறவைகளுக்கு அறிவு முன்றே. மார்பினால் நகரும் பிராணிகளுக்கு இரண்டு அறிவு. தாவரங்களுக்கு அறிவு ஒன்று என்று ஆராய்ந்து பின் மனித உடலின் சிறப்பை நன்கு உணர்ந்து அதை உலகுக்கு எடுத்துக் காட்டியவர்கள் சித்தர்களே!.எப்பொருள் வடிவும் ஓம் ஆகும். 'சிந்தையிலே களங்க மற்றார் சித்தன் ஆவான்" (அகத்தியர் நூறு 50) 'சிந்தை தெளிந் திருப்பவன் ஆர் அவனே சித்தன்" (வான்மீகர் சூத்திர ஞானம் 2) செகமெலாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன் திறந்துமனத்தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்" (வான்மீகர் சூத்திர ஞானம் 3)
சித்தர்களின் இயல்பு சித்தர்கள் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை நெறிகளையே எடுத்துக்கூறியுள்ளனர். சாத்திரக் குப்பையிலும் கோத்திரச் சண்டையிலம் ஈடுபடாமல், மக்களை நன்னெறிப்படுத்த முயன்ற வடநாட்டு நவநாத சித்தர்கள் போலத் தமிழகச் சித்தர்களும் சீர்திருத்தத் கருத்தக்களை வலியுறுத்தி மக்களுக்கு நல்வழி காட்டியுள்ளனர். இராமலிங்க அடிகாளர் தெவித்துள்ள மரணமிலாப் பெருவாழ்வு சித்தர்கள் கூறிய நெறியேயாகும். 'கூற்றம் குதித்தலும் கைகூடும்" (269) என்னும் வள்ளுவர் கருத்தினை வாழ்க்கையில் நிலைநிறுத்திக் காட்டியவர்கள் இச்சித்தர்கள், இவர்கள் ஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி முறைகளைத் தம் பாடல்களின் இயம்பியுள்ளனர்.வைத்தியம், இரசவாதம், ஞானம் மந்திரம் முதலியவை பற்றி எல்லாம் நூல்கள் எழுதியுள்ளனர். மேலும் வானநூல், கணிதம் முதலியவை பற்றிய புலமையையும் இவர்தம் நூல்களில் காணமுடிகிறது. சித்தர் பாடல்கள் பொதுமக்களும் பாடும் வண்ணம் எளிமையான நடையில் அமைந்தவை. எனினும்அய கருத்துக்கள் அடங்கியவை . கல்லாதவர், கற்றவர் இரு சாராருமே கேட்டு மகிழும் வகையில் அப்பாடல்கள் விளங்குகின்றன. கடவுளரும் சித்தராகக் கருதப்பட்டனர். அவர்தம் செயல்களும் சித்துக்களாக மதிக்கப்பட்டன. பழினியிலுள்ள முருகன் கோயில் சித்தன் வாழ்வு என அழைக்கப்பெற்றது. எல்லா ஆற்றலும் பெற்றிருப்பவன் ஆதலின் முருகனுக்குச் சித்தன் என்னும் பெயரும் உண்டு. சிவபெருமான் செய்த அருஞ்செயல்களைத் திருவிளையாடற் புராணம் சித்துக்களாகக் குறிப்பிடும். மக்களால் சித்தர்களும் கடவுளராகப் போற்றப்பட்டனர். மூச்சினை யடக்கி யோக ஆற்றலினால் உடலில் உள்ள மூலதாரம், கொப்பூழ், இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலைமுடி என்ற இவ் ஆறு இடங்களிலும் மனத்தை முறையாக நாட்டிக் குண்டலியை எழுப்பிப் பலபல அனுபவமும் வெற்றியும் கண்டு. அப்பாலிலுள்ள எல்லாம் ஆன பொருளில் நிலைத்துச் சித்தி பெறுபவரே சித்தர் என்ற வழக்கம் பரவுயுள்ளது எனப் பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சி சுத்தரனார் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ளனர்.ஆகம மாகிய இந்த மனித உடம்பிலே தெய்வப் பக்தி கொண்டு இதனுள் அருட்சக்தியை வளர்த்து ஆன்ம பணாமத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருவாழ்வு வாழ்ந்து அருளை வழங்கி வருகின்ற பெயோர்களே மகான்களே சித்தர்கள், என்று மீ.ப. சோமசுந்தரனார் தம் சித்தர் இலக்கியம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (பகுதி 1 பக்கம் 14) இறையடியார்களுள் பக்தர், பகவர், முனிவர், சித்தர் எனப் பல வகையினர் இருந்தனர் என்பர், பெரியாழ்வார் தம் பாசுரத்தில்
மாங்காய்ப் பால்உண்டு மலைமேல் இருப்போருக்குத்
தேங்காய்ப்ப தால் ஏதுக்கடி-குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி. ஞானப் பாலுண்டு தலை உச்சியலே சிந்தனை கூடி நிலைத்து நிற்கும் ஞானிகளுக்கு உலக இச்சையாகிய பிற இன்பங்கள் வேண்டியதில்லை எனக் குதம்பைச் சித்தன் விளக்கம் அளிக்கிறார்.மாங்காய் என்பது பிரமம், பால் என்பது அதன் அனுபவம், அதாவத ஞானப்பால், தேங்காய்ப்பால் உலக இச்சை, மலை என்பது மேலான சமாதி, இவ்வாறு உள்ளுறைப் பொருள் அமைத்துப் பாடும் பாடல்களைப் பிறிது மொழிதலணி என்று கூறுவர், சித்தர்கள் தம் கொள்கைகளை மறைவாக வைத்துக் கொள்ள குழுஉக் குறியினைப் படைத்துக் கொண்டனர். திருமந்திரத்திலுள்ள சூனிய சம்பாடணை (உரையாடல்) இதற்குச் சயான சான்றாகும். அவர்களின் மருத்துவ நூல்களும் இவ்வாறு குழுஉக் குறிகளைப் பயன்படுத்தியுள்ளன. சித்தர் இலக்கியம் சீர்திருத்தம் பேசினாலும் நாத்திகத்தன்மை யுடையதன்று சித்தர்கள் இறைப்பற்று மிகவும் உடையவர்கள். தஹ்நெறி, அட்டாங்கயோகம் முதலியவை கடினமாகத் தோன்றினாலும் அவர்கள் எடுத்துரைக்கும் நெறி சிறந்ததாகும். சயை, கியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறியினையும் சித்தர்கள் பின்பற்றியுள்ளனர். சமயப்பொது நோக்கு, சாதி வேறுபாடின்மை. மூடப் பழக்க வழக்கங்களைச் சாடுதல் முதலானவை அவர்தம் பாடல்களில் காணப்பெறும் சீர்திருத்தங்களாகும். மனிதனுக்கு அவனது உடம்பைக் கொண்டு செய்ய வேண்டிய ஞானச் செயலைக் கற்பிக்கும் அனுபவப் பேரறிவுப் பெருநூல் சித்தர் இலக்கியம் எனச் சிறப்பித்துப் பாராட்டுவர் மீ.ப. சோமு. மேலும் அவ்விலக்கியங்கள் அறக்கருத்துக்களை வலியுறுத்தும் என்றும் மனமாசின்றிக் காக்கவும் தீமைகளை நீக்கி நன்மைகைளைச் செய்யவும் பல அறச் செய்திகளைக் கூறுகின்றன என்றும் மனிதனை மனிதனாக்குவதற்கு வேண்டிய மனப் பயிற்சி தந்து அவனை மனிதனாக்கிப் பின் வானவராக உயர்த்தும்உயய நோக்கங்கள் கொண்டவை என்றும் விளக்கியுரைத்துள்ளார்.சித்தர்கள் வெளியில் சென்று கோயில் வழிபாடு செய்ய விரும்புவதில்லை. புறச் சடங்குகளையும் அவர்கள் ஏற்பதில்லை. மனக் கோயில் வழிபாடே அவர்கட்கு முதன்மையானதாகும். யோகமுறை மூச்சடக்கிப் பயிற்சி செய்தல் ஆகியவற்றையே அவர்தம் நூல்கள் வித்துரைக்கின்றன. மன்பதைக்கு வேண்டிய சீர்திருத்தக் கருத்துக்களும் அவர்களுடைய பாடல்களில் மிகுதியாக உள்ளன.
மணிமேகலைத் தொடர்களும் சில சித்துக்களைத் தெவிக்கின்றன. சித்தர்களின் வகையினர், தாயுமானவர், பாம்பாட்டி சித்தர், இராமலிங்க அடிகள் முதலானோர் பாடல்களில் காணப்பெறும் சித்து விளையாடல்கள் பற்றிய செய்திகள், சித்தர் பாடல்கள்வழி அறியப்பெறும் சீர்திருத்தங்கள், சித்தர் பாடல்களில் அமைந்துள்ள யாப்பு வகைகள் முதலானவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன. சித்தர் என்னும் சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் ஆகியவற்றில் பேசப் பெறாவிடினும், அவரைப்பற்றிய குறிப்புக்கள் இலை மறை காய்போல அவற்றில் காணப்படுகின்றன.தாயுமானவர், பாம்பாட்டிச் சித்தர், இராமலிங்க அடிகள் முதலானோர் தத்தம் பாடல்களில் சித்து விளையாடல்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.தாயுமானவர் மதயானையை அடக்குதல், கரடி புலிகளின் வாயைக் கட்டுதல், சிங்கத்தை முதுகின் மேல் ஏற்றுதல், பாம்பைப் பிடித்தாட்டுதல், ஐந்து உலோகப் பொருள்களையும் விலையுயர்ந்த பொருளாக மாற்றுதல் பிறர் கண்ணிற் படாமல் உலாவுதல், தேவரை அடிமை கொள்ளல், எப்பொழுதும் இளமையோடிருத்தல், பிறர் உடலிற் புகுதல், நீர்மேல் நடத்தல், நெருப்பில் அமர்தல், முதலிய சித்துக்களைத் தம் பாடலில் (தேசோ மயானந்தம் 8) குறிப்பிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக