வலைப்பதிவு காப்பகம்

வெள்ளி, 6 ஜனவரி, 2017

சீனா மற்றும் இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்..சீனா இந்தியாவின் அக்னி 5 ஏவுகணையை பார்த்து நடுங்குவதற்க்காண காரணம் இதோ !!!
என்ன தான் இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும்,நம்மிடம் உள்ள அணு ஆயுத ஏவுகணைகளின் எண்ணிக்கை சீனாவை ஒப்பிடும் பொது மிகக்குறைவே. ஆம் இந்தியாவை விட சீனா அதிக அணு ஆயுத ஏவுகணைகளை கொண்டுள்ளது.
எண்ணிக்கை என்று வரும் போது சீனா முன்னிலையில் இருந்தாலும்,தரம் என்று பார்க்கும் போது சீனாவின் ஏவுகணைகளை விட இந்தியாவின் ஏவுகணைகள் அதிக திறன் வாய்ந்தவை.
சீனாவிடம் உள்ள ஏவுகணைகளின் பட்டியல்
1) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் -47
2) இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் – 800
3) குறுகிய தூர ஏவுகணைகள்-1,500
இந்தியாவிடம் சீனாவை விட சிறந்த ஏவுகணைகள் உள்ளன என்பதற்க்கான மூன்று முக்கிய காரணங்கள்
சீனாவின் பெரும்பாலான ஏவுகணைகள் திரவ நிலை எரிபொருட்களையே பயன்படுத்துகின்றன.இந்தியாவின் ஏவுகணைகள் அனைத்தும் பெரும்பாலும் திட நிலை எரிபொருட்களையே பயன்படுத்துகின்றன. திரவ நிலை எரிபொருட்களை ஏவுகணைகளில் நிரப்புவதற்கு சுமார் 10 முதல் 12 நாட்கள் ஆகும். இந்த கால தாமதத்தால் சீனாவால் நினைத்த நேரத்தில் ஏவுகணைகளை ஏவு முடியாது.ஆனால் திட நிலை எரிபொருட்களை நிரப்புவது மிக எளிது.ஆகவே இந்தியா நினைத்த நேரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவுகணைகளை ஏவ முடியும்.
துல்லியத்தன்மை என்று வரும்போது சீனாவின் ஏவுகணைகள் இலக்கை சுற்றி 600 மீட்டரில் விழும்.ஆனால் இந்தியாவின் ஏவுகணைகளின் துல்லியத்தன்மை 20 மீட்டர். ஆகவே சீன ஏவுகணைகளை விட இந்திய ஏவுகணைகள் இலக்கை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது.
#மூன்றாவது_காரணம்_MIRV :
.
அதாவது ஒரு ஏவுகணையில் இருந்து பல்வேறு வகையான இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை ஏவும் திறன். இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஏவுகணைகள் இந்த MIRV தொழில்நுட்பத்தில் செயல்படும் திறன் வாய்ந்தது. இந்தியாவால் ஒரே நேரத்தில் ஒரு ஏவுகணையில் இருந்து சுமார் பத்து இலக்குகளை நோக்கி அணு ஆயுதத்தை செலுத்த முடியும்.இந்த வகையான ஏவுகணைகளை அழிக்க முடியாது.இந்த வகையான தொழில்நுட்பம் சினாவின் குறைந்த ஏவுகணைகளில் மட்டுமே உள்ளது.
சீனாவின் பத்து ஏவுகணைகளால் எவ்வளவு சேதத்தை ஏற்ப்படுத்த முடியுமோ,அவ்வளவு சேதத்தை இந்தியாவின் ஒரு ஏவுகணை ஏற்ப்படுத்தி விடும்.
அக்னி 5 ஏவுகணை மேலே குறிப்பிட்ட பல்வேறு வகையான காரணிகளையும் கொண்டுள்ளது. மற்றும் சில மேம்பாட்டு நிலையில் உள்ளன.
அதனால் தான் சீனா இந்தியாவின் அக்னி 5 ஏவுகணையை பார்த்து பயப்படுகிறது.
பெருமையோடு பகிருங்கள் நாம் இந்தியர்கள் என்று.
மறக்காமல் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.
இதுபோன்ற பதிவுகளுக்கு இந்திய இராணுவச் செய்திகள் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்..
#ஜெய்ஹிந்த்
#Jaihind

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக