உங்களில் எத்தனை பேர்களுக்கு நீங்கள் விரும்பிய வாழ்க்கை,கல்வி,வசதி,புகழ் அமைந்திருக்கின்றது?
இவையெல்லாம் அமையாமல் போனவைகளுக்குக் காரணம் நீங்கள் உங்கள் முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு பிதுர் தர்ப்பணம் ஆண்டுக்கு ஒருமுறை கூட செய்யாமல் இருப்பதுதான் காரணம்;
1950 முதல் இன்று வரை செய்த நாத்திகப்பிரச்சாரம்,டெக்னாலஜி மூலமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் இந்து தர்ம நம்பிக்கைகளை கேலி செய்யும் சினிமா காட்சிகள்,டிவி நிகழ்ச்சிகள்,கலியுகத்தின் கொடூர சம்பவங்கள்,போலித் துறவிகளால் உண்டான பக்தி சறுக்கல்கள் போன்றவை நம்மிடம் இருந்து பக்தியை பிரித்துவிட்டன;
பிதுர் தர்ப்பணம் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை என்று மூன்று அமாவாசைகளுக்கும் செய்து வர வேண்டும்;அல்லது புரட்டாசி அமாவாசைக்கு மட்டுமாவது செய்து வர வேண்டும்;
ஏனென்றால்,நமது அம்மாவின் அப்பா+அம்மா,அப்பாவின் அப்பா+அம்மா என்று நான்கு பேர்களுக்கு மட்டுமே பித்ரு தர்ப்பணம் செய்யவே ஆண்டுக்கு நான்கு நாட்கள் காசி அல்லது ராமேஸ்வரம் செல்ல வேண்டும்;இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் அது சாத்தியமா?
அவன்/ள் மட்டும் சகல வசதிகளோடு இருக்கின்றான்/ள். . . நான் மட்டும் ஏன் இப்படி நிம்மதியின்றி வாழ்ந்து வருகின்றேன்? என்று சுய பச்சாதாபப்படாமல் பித்ரு தர்ப்பணம் ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்ய ஆரம்பியுங்கள்:
உலகின் மொத்த நிர்வாகமும் காசி கால பைரவப் பெருமானின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது;காசியின் நிரந்தர தெய்வம் மஹாகால பைரவப் பெருமானே!ஈசனின் சூலாயுதத்தின் நடு முனையில் இருக்கும் நகரமாக காசியைக் கூறுவர்;காசியின் பரப்பளவு 144 மைல்கள்!
எல்லோருக்கும் அறிந்தவிதத்தில் காசியில் இருக்கும் கங்கைக்கரையில் 64 பைரவர்களின் சன்னதிகள் இருக்கின்றன;மஹா வராகியின் சன்னதிகளும் காசியில் இருக்கும் கங்கைக்கரையில் இருக்கின்றன;64 பைரவ சக்திகளுக்கு ஈடாக 64 வராகி சக்திகளின் பீடங்களும் இருக்கின்றன;பைரவ உபாசகர்களுக்கும்,வராகி உபாசகர்களுக்கும் தான் இந்த 64 பைரவ சன்னதிகளும்,64 வராகி பீடங்களும் தெரியும்;மற்றவர்களுக்கு ஆன்மீக சுற்றுலா மையங்களில் ஒன்று காசி;
வறுமை,உடல் நலக்கோளாறு,உடல் ஊனம்,உறவுகள் மற்றும் சந்ததிகளின் ஆதரவு இல்லாதவர்கள் பலரால் காசிக்குச் சென்று முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்ய இயலாது;இதை போன யுகங்களில் யூகித்த ரிஷிகளும்,சித்தர்களும் காசிக்கு இணையான ஆலயங்களை நமது தமிழ்நாட்டில் ஈசனின் அருளால் நிறுவியுள்ளார்கள்;
சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூர்
திப்பிராஜபுரம்(கும்பகோணம்) அருகில் இருக்கும் உள்ளிக்கடை
அறந்தாங்கி அருகில் இருக்கும் நெடுங்குடி
கும்பகோணம் அருகில் அமைந்திருக்கும் சேஷம்பாடி
புள்ளமங்கலம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர்
திருக்கோவில்
மயிலாடுதுறை
திருவெண்காடு
திருவையாறு
ஸ்ரீவாஞ்சியம்
சாயாவனம்
இவ்விடங்களில் ஒவ்வொரு அமாவாசை அல்லது திதி நாட்களில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யலாம்;
கயா தலத்திற்கு ஈடாக இருக்கும் ஸ்தலங்கள்:
இராமேஸ்வரம்
குருவி ராமேஸ்வரம்
காமேஸ்வரம்
திருவாரூர் அருகில் இருக்கும் கேக்கரை
திருச்சி அருகில் இருக்கும் பூவாளூர்
வீட்டிலேயே தினமும் பித்ரு தர்ப்பணம் செய்து வரலாம்;அதற்கு நேரமும் செய்யும் வழிமுறையும் முறையாக அறிந்து செய்வது அவசியம்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக